Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. எடை குறைவு குழந்தைகளை கண்காணிக்க கருவிகள்…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதிகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ரூ. 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

அதன்படி செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலமாக குழந்தைகளின் எடை குறைவு பிரச்சினைக்கு தீர்வு காணும் மின்னணு தொழில்நுட்ப கருவியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கருவி ஒன்ற ரூ.8,500 என்ற விலையில் கொள்முதல் செய்யலாம் என்றும் ஆயிரம் கருவிகளை ரூ.85 லட்சத்துக்கு வாங்கவும் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து இதற்கான செலவினத்தை மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் 80% மாநில அரசின் நிதியாக 20% அழிக்கலாம் என்று அவர் கேட்டுள்ளார். அவரது கோரிக்கை ஏற்று ஆயிரம் கருவிகளை ரூ.85 லட்சம் செலவில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இதில் மாநில அரசின் பங்காக ரூ.17 லட்சமும் மத்திய அரசின் பங்காக ரூ.68 லட்சமும் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |