சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கீழ் ஸ்டான்லி மருத்துவமனையில் 10 கோடி செலவில் 10,000 மேற்பட்ட இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்ட் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மாரடைப்பிலிருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.
காப்பீடு திட்டத்தில் ரூபாய் 10.50 லட்சம் செலவில் ஆறு நோயாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு திட்டம் மூலமாக தமிழகத்தில் உள்ள 1700 மருத்துவமனைகளில் 1090 வகையான நோய்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.