Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!!…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு “இனி கவலை இல்லை”…. அரசு வெளியிட்ட குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இதனால் நமது தமிழ்நாட்டில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் வருகின்ற வியாழன்கிழமை  முதல் இயக்கப்படுகிறது.

அதில்  சென்னை-பம்பை-குமளி  இடையே அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்தில் செல்லும் பெரியவர் ஒருவருக்கு 1090 ரூபாயும், சிறியவர்களுக்கு 545 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஜனவரி 18-ஆம் தேதி வரை நீடிக்கும் என அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |