வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் புக் செய்வதற்கு நிறைய வழிகள் தற்போது உள்ளது. மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன் பதிவு செய்கின்றனர். மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதால் அதை வாடிக்கையாளர்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அவ்வகையில் பேடிஎம் நிறுவனம் சிலிண்டர் முன்பதிவுக்கு சிறப்பு சலுகையை வழங்குகிறது. அந்நிறுவனம் ‘3 Pay 2700 cashback offer’ என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன் மூலமாக உங்களுக்கு 2700 ரூபாய் வரையில் கேஸ் பேக் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் தலா 900 ரூபாய் என மொத்தம் 2,700 ரூபாய் வரை நீங்கள் சலுகை பெறலாம். இந்த சலுகை வாடிக்கையாளர்களை பொறுத்து மாறுபடும். பத்து ரூபாய் முதல் 900 ரூபாய் வரை எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். முக்கியமானது என்னவென்றால், பேடிஎம் ஆப் மூலமாக முதன்முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி புக்கிங் செய்வது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அதற்கு முதலில் பேடிஎம் செயலியில் உள்ள “book cylinder” என்ற வசதியில் சென்று உங்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். அதில் பாரத் கேஸ், இன்டேன் மற்றும் எச்பி கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர் இடம் பெற்று இருக்கும். அதில் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் மொபைலின் அல்லது எல்பிஜி ஐடி நம்பரை பதிவிட்டு proceed கொடுத்தால் சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும். நீண்ட ரின் விலை தற்போது ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் இந்த சலுகை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.