சென்னை தீவு திடலில் இன்று முதல் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. மக்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 70 நாட்களுக்கு பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சென்னை தீவு திடலில் 47வது சுற்றுலாத்தொழில் பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி வருடம் தோரும் நடத்தப்படுவது வழக்கம்.