Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. டாடா டியோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்….. இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா…..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ NRG சீரிசில் புதிதாக XT எனும் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.இந்த  புதிய டியாகோ XT வேரியண்ட் டாப் எண்ட் மாடலை விட ரூ. 41,000 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ NRG XT வேரியண்டில் XZ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஸ்டைலிங்கில் புதிய XT வேரியண்டில் 14 இன்ச் அளவில் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், ஃபாக் லேம்ப்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து காரின் உள்புறம் ஆல் பிளாக் தீம், 3.5 இன்ச் ஹார்மன் கார்டன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பவர்டிரெயினில் டாடா டியாகோ NRG XT மாடலிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு உள்ளது

Categories

Tech |