Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படி ஒரு சலுகையா?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

மாற்றுத்திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்ட உத்தரவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தாா். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க, முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மண்டல (அல்லது) வாா்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்பின் தோ்வு செய்யப்பட்ட இடங்களில் இடப் பற்றாக்குறை உள்ள போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விற்பனைக்கு அனுமதி இல்லாத இடங்களிலிருந்து கடைகளுக்கு மாற்றுஇடம் ஒதுக்கீடு செய்திடும்போது முன்பே மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்து வந்த இடங்களுக்கு அருகிலேயே கடை ஒதுக்கீடு செய்யப்படும். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில் விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |