Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்….. தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்….. தித்திக்கும் இனிப்பு பண்டங்கள்…. ஆவினின் அசத்தல் அறிமுகம்…..!!!!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் தலைமை அலுவலகத்தில் வைத்து புதுவிதமான இனிப்புகளை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களிடையே ஆவின் இனிப்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது‌. கிராமப்புறங்களில் இருந்து சுமார் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன், 225 வகையான இனிப்பு பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மூலம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த பயன் பெறுகின்றனர்.

இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய இனிப்பு பண்டங்களை பால்வளத்துறை அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி மிக்சர் 200 கிராம் 100 ரூபாய்க்கும், கருப்பட்டி அல்வா 250 கிராம் 170 ரூபாய்க்கும், நெய் அல்வா 250 கிராம் 125‌ ரூபாய்க்கும், வகைப்படுத்தப்பட்ட இனிப்பு பண்டங்கள் 500 கிராம் 50 ரூபாய்க்கும், காஜு கத்லி 250 கிராம் 250 ரூபாய்க்கும், காஜூ பிஸ்தா ரோல் 250 கிராம் 320 ரூபாய்க்கும், ஸ்டப்டு மோதி பாக் 250 கிராம் 180 ரூபாய்க்கும், நட்ஸ் அல்வா 250 கிராம் 190 ரூபாய்க்கும், நெய் பாதுஷா 250 கிராம் 190 ரூபாய்க்கும் சுத்தமான ஆவின் நெய் மூலம் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த இனிப்பு பண்டங்கள் அனைத்தும் சென்னை அம்பத்தூரில் உள்ள பால் பண்ணையில் தயார் செய்யப்பட்டு பேக் செய்யப்படுகிறது. இதனையடுத்து கருப்பட்டி அல்வா விருதுநகரிலும், நெய் அல்வா திருநெல்வேலியில் உள்ள பால் பண்ணையிலும் தயார் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தமிழகம் முழுதும் உள்ள 10,000 இடங்களில் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு விற்பனை மையங்கள் மூலம் சில்லறை விலையில் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பண்டங்களை அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், கூட்டுறவு, போக்குவரத்து மற்றும் பிற துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மொத்தமாக ஆர்டர் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த இனிப்பு பண்டங்களை கீழ்கண்ட தொலைபேசி நம்பர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் ஆர்டர் செய்யலாம் என தமிழக பால்வளத்துறை அறிவித்துள்ளது. அதன்படி,

சென்னை தலைமைச் செயலகம்-7358018395
சென்னை மத்திய மண்டலம்-7358018393
சென்னை வடக்கு மண்டலம்-7358018392
சென்னை தெற்கு மண்டலம்-7358018391
மற்ற மாவட்டங்கள்-7358018396
கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 4253300
whatsapp எண் 7358018390
மின்னஞ்சல் முகவரி[email protected]

Categories

Tech |