Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…… உடனே விண்ணப்பியுங்கள்…..!!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  அதனைப் போல 11 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், பட்டயப்படிப்பு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவ-மாணவிகள் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்காலம். எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |