Categories
உலக செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பிரபல நாட்டு நாடாளுமன்றத்தில்…. முதல் பெண் சபாநாயகர்….!!!

பிரான்ஸில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் அதிபர் மேக்ரான் தலைமையிலான மையவாத கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், பெரும்பான்மை பெற தவறியது. இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக தேர்வு செய்வதற்கு ரகசிய ஓட்டு நடைபெற்றது.

இதில் மேக்ரானியின் மையவாத கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட யேல் பிரவுன் பிவெட் என்கின்ற பெண் எம்.பி. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரான்ஸ் நாடாளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்கின்ற பெருமையை யேல் பிரவுன் பிவெட் பெறுகிறார்.

Categories

Tech |