இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எரிபொருள் விலையில் குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஷாபாஷ் ஷெரிப் கூறியது, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.40 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்ற போது சந்தை விலைக்கேற்ப கனத்த இதயத்துடன் விலையே ஏற்றியதாக அவர் வருத்தமாக தெரிவித்துள்ளார்.