அமெரிக்காவில் உள்ள 9 வது சர்க்யூட் அப்பில் கோர்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளி தேர்வு தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து ஓட்டெடுப்பு சென்ட் சபையில் நடைபெற்ற முடிந்தது. இதில் அவரது நியமத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால் ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கனடாவில் டொராண்டாவில் பிறந்தவர் அமெரிக்காவின் அரிசோனா ஜேம்ஸ் இ ரோஜர்ஸ் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து தேர்ச்சி பெற்றார்.
இவர் தற்போது நீதிபதியாகியுள்ள 9 வது சர்கியூட் அப்பீல் கோட்டில் தலைமை நீதிபதி மேரி ஸ்ரோடரின் சட்ட குமாஸ்தாவாக 2005, 2006 ஆண்டுகளில் பணியாற்றினார். அதன் பிறகு வக்கீல் தொழில் செய்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி இவரை 9வது சர்க்யூட் அப்பீல் கோர்ட் நீதிபதியாக ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்தார். அதற்கு இப்போது நாடாளுமன்ற சட்டையை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த கோட்டில் தெற்காசியாவில் இருந்து முதன் முதலாக நீதிபதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.