Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள்…. கூட்டுறவு அமைச்சர் திறப்பு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான பூங்கா, பாலம், தார்சாலை ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சித்தையன்பேட்டை பேரூராட்சி புதுத்தெரு எஸ்.ஏ.கே நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார் அதன் பிறகு ஆலமரத்து வாய்க்கால் முதல் கொம்பை வரை ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான தார் சாலை, பாலம் வாய்க்கால் ஆகிய முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டார். அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்தி நாதன், மண்டல துணை இயக்குனர் மனோரஞ்சிதம், சித்தையன் கோட்டை பேரூராட்சி தலைவர் பொதும்பொண்ணு முரளி, துணைத்தலைவர் ஜாகிர் உசேன், செயல் அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |