கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் முதல் 200 அடிக்கப்பட்ட நாளை நினைவு கூர்ந்து சச்சினை பாராட்டும் வகையில் BCCI வீடியோ பதிவிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஐசிசி வகுக்கும் விதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கூட ஒரு கிரிக்கெட் வீரர் எளிதாக 200 ரன்களை அடிக்க முடியும் என்று மாறிவிட்டது. ஆனால் இதற்கு முன்பு கடந்த கால கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பாக 1990 முதல் 2000 வரை இந்த நிலைமை மிகவும் மாறுபட்டு இருந்தது. சொல்லப்போனால் தனி நபராக ஒரு வீரர் 130 ரன் முதல் 150 ரன்கள் எடுப்பதே கடினமாக இருந்தது. கிரிக்கெட் ஜாம்பவான்களாக விளங்கிய இலங்கை அணியின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் அன்வர் , ஏன் சச்சின் டெண்டுல்கருக்கு கூட 200 அடிக்கும் சாதனை நூலிழையில் தவறி போய் தான் இருந்தது.
பாகிஸ்தான் அணியை சேர்ந்த சையத் அன்வர் 1999 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அடித்த 194 ரன்களே நீண்ட நாளாக தனிநபரின் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த ரன்னை யாரும் நெருங்க முடியாது என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில் கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2010ஆம் ஆண்டு இதேநாள் அந்த ரன் சாதனையை முறியடித்தார்.
குவாலியரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் சதம் விளாசினார். சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக ஆடினாலும் இரட்டை சதம் அடிப்பாரா என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படவில்லை , ஆனாலும் அவர் இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் மனதில் மேலோங்கி இருந்தது.அவரின் 194 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கர் கடைசி ஓவரில் சிங்கிள் எடுத்து இரட்டை சதம் அடித்தார்.
144 பந்துகளை சந்தித்த சச்சின் டெண்டுல்கர் 25 பவுண்டரி 3 சிக்சர்கள் உட்பட 200 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஒருநாள் தொடரில் யாரானாலும் 200 ரன்கள் அடிக்க முடியும் என்ற வழிகாட்டியாக இருந்து தான் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனை இலக்கை எட்டினார்.இது குறித்து சச்சின் கூறும்போது , எனது சாதனையை கட்டாயம் ஒரு இந்தியர் முறியடிப்பார் என்று தெரிவித்திருந்தது.
சச்சினின் எண்ணத்தை மெய்ப்பிக்கும் வகையில் விரேந்திர சேவாக் 2011-இல் சச்சினின் சாதனையை முறியடித்தார்.அதன் பின்னர் தான் மற்ற நாட்டு வீரர்களான கெயில், மார்டின் கப்தில் தொடங்கி 3ஆவது இந்தியராக ரோகித் சர்மா இந்த சாதனை முறியடித்துள்ளார். இக்கட்டான சூழலில் யார் அணிக்காக சாதனை படைக்கும் நபராக இருக்கின்றாரோ அவரின் பெயரை தான் ரசிகர்கள் மனதில் வைத்திருப்பார்கள். அந்த வகையில் சச்சின் அடித்த இரட்டை சதம் இந்த நாளில் நிகழ்த்தபட்ட இந்த சாதனை இதுவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
சச்சின் அடித்த சத்தத்தை நினைவு கூறும் வகையில் BCCI தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.
#OnThisDay in 2010, @sachin_rt created history by becoming the 1st batsman to score a 200 in ODIs. 🇮🇳👏
Relive the knock 👉 https://t.co/yFPy4Q1lQB pic.twitter.com/F1DtPmo2Gm
— BCCI (@BCCI) February 24, 2020