Categories
மாநில செய்திகள்

“சூப்பர் அப்பு” 4 வயதில் நாடகத்தில் ஜோடி…. 22 வயதில் நிஜ தம்பதிகளாக மாறிய…. சுவாரஷ்யமான நிகழ்வு…!!

சிறுவயதில் நாடகத்தின் மூலமாக இணைந்த ஜோடிகள் இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தைகள் பெற்றுள்ளனர். உயிர் நண்பர்களாகவே இருந்த இவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைகளின் நான்காவது வயதில்” ஒரு இராணுவ வீரரின் திருமணம்” எனும் நாடகத்தில் கணவன் மனைவியாக பெற்றோரான அந்த ஆசிரியர்கள், குழந்தைகளை நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் பல வருடங்கள் சென்றுள்ளது.

ஸ்ரீராம் ராணுவ அதிகாரி பணிக்கு தேர்வு எழுதி ராணுவ அதிகாரியும் ஆகியுள்ளார். ஆர்ய ஸ்ரீ மருத்துவம் படித்து மருத்துவர் ஆகியுள்ளார். இதையடுத்து ஒருநாள் ஸ்ரீராம் சிறுவயதில் நாடகத்தில் நடித்த தங்கள் பழைய போட்டோவை தேடி எடுத்துள்ளார். பின்னர் ஆர்ய ஸ்ரீயை தொடர்பு கொண்டு நாம் ஏன் இப்போது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டுள்ளார். இதற்கு அவரும் சம்மதிக்க இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஜோடிகள் தற்போது திருமணம் செய்துள்ளனர்.

Categories

Tech |