18 வயதுடைய இளம் பெண் ஆர்யா வால்வேகர், அமெரிக்க வாழ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.
அமெரிக்கா நாட்டில் இந்திய வம்சாவளியில் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான “மிஸ் இந்தியா அமெரிக்கா” போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான “மிஸ் இந்தியா அமெரிக்கா” போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சி என்ற மாகாணத்தில் நடைபெற்றது.
இதில் வெர்ஜீனியா என்ற மாகாணத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் ஆர்யா வால்வேகர், அமெரிக்க வாழ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ஆர்யா வால்வேகர் இது குறித்து கூறியதாவது, “என்னை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்பதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றவேண்டும் என்பதும் எனது சிறுவயது கனவு” என்று அவர் கூறியுள்ளார். மேலும் புதிய இடங்களைத்தேடிப் பயணம் செல்வது, சமைப்பது மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை தனது பொழுதுபோக்குகளாக இருப்பதாக ஆர்யா கூறியுள்ளார். இந்த போட்டியில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் 2ம் ஆண்டு மருத்துவப்படிப்பு மாணவி சவுமியா ஷர்மா 2-வது இடத்தையும், நியூ ஜெர்சியைச் சேர்ந்த சஞ்சனா செகுரி 3-வது இடத்தையும் பிடித்துள்ளார்.