Categories
டெக்னாலஜி

சூப்பர் அம்சங்களுடன்….. இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்…!!

Motorola நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Motorola G32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்படும் என்றும் 2 வருடங்களுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் Motorola அறிவித்துள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Moto G32 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு+டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா கொண்டுள்ளது.

புதிய Moto G32 ஸ்மார்ட்போன் சேடின் சில்வர் மற்றும் மினரல் கிரே நிறங்களில் கிடைக்கும். இதன் விலை 12 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Flipkart தளத்தில் நாளை முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி மாத தவணை முறையில் வாங்கும் போது ரூ. 1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Categories

Tech |