அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வருகின்ற 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த நமது தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் போட்டிகள் நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.