தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது மே-24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்தார். இந்நிலையில் ஜி ஸ்கொயர் மற்றும் கிரெடாய் நிறுவனங்களின் சார்பில் அரசு மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட்ட பின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் அடுத்த பத்து நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார் .