Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு: இன்னும் 45 நாட்களில்…. தமிழகத்தில் 6,503 பணியிடங்கள்….!!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு மொத்தம் 6,503 காலி பணியிடங்கள் இருந்த நிலையில் இதற்கு நவம்பர் 14ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்தார்கள். இந்த பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்து இருந்தாலே போதும்.

இந்நிலையில் இன்னும் 45 நாட்களில் கூட்டுறவுத் துறையில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,503 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது உறுதியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் தேதி தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |