Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு… நவம்பர் 28-ல் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் வருகின்ற 28 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திண்டுக்கல் எம்விஎம் மகளிர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை சார்ந்த சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 18 முதல் 35 வயது வரை உள்ள 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |