Categories
அரசியல்

சூப்பர்…! இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி…. முதல்வருக்கு நன்றி சொன்ன அண்ணாமலை…!!!

தமிழகத்தில் வாரத்தில் மற்ற நாட்களைப்போல வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பாஜகவுக்கும், ஆளுங்கட்சிக்கும் இதனால் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவராத்திரி நன்னாளில் தமிழக பாஜகவின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர் அவர்களுக்கும், அறநிலை துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |