Categories
மாநில செய்திகள்

சூப்பர்!…. உலகின் மிகப்பெரிய பைரவர் கோவிலில் விரைவில் மகா கும்பாபிஷேக விழா….. அசத்தல் தகவலால் மகிழ்ச்சியில் பக்தர்கள்…..!!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராட்டை சுற்றுப்பாளையத்தில்  உலகின் மிகப்பெரிய பைரவர் கோவில் கட்டும் பணிகள் சுமார் 7 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணிகள் எப்போது முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாகவும இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பலன் கிடைக்கும் விதமாக மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சுமார் 7 வருடங்களாக கோவில் கட்டுமான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலின் சிறப்பாக உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இடம் பெற்றுள்ளனர். அதோடு 39 அடியில் பிரம்மாண்டமான காலபைரவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை unique Book of World record-ல் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் 13-ம் தேதி காலை 10:15 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தின் போது 600 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுவதோடு, செல்வத்தின் அடையாளமாக நாணயங்களும் அர்ப்பணிக்கப்படும்.

அதன் பிறகு மகா கும்பாபிஷேக பூஜையானது 4 கால பூஜையாக நடைபெற இருப்பதால் மார்ச் மாதம் 10-ம் தேதி காலை 11 மணி அளவில், சுவர்ண ஆகர்ஷண பஞ்சலோக பைரவ சிலைக்கு பொதுமக்களால் நெய் அபிஷேகம் செய்யப்படும். அதன் பிறகு மார்ச் 11-ம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். அதன் பின்பு பிற்பகல் 2:30 மணி அளவில் கரகம், கும்பம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வும், மார்ச் 12-ம் தேதி காலை 10 மணிக்கு 2-ம் கால பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால பூஜை, இரவு 7 மணிக்கு கும்மி திருவிழா போன்றவைகள் நடைபெறும்.

இதனையடுத்து மார்ச் 13-ஆம் தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால பூஜை தொடங்கி சரியாக 10:15 மணியளவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெறும். மேலும் மார்ச் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் அனைத்து பக்தர்களும் கோவிலுக்கு வருகை புரிந்து பைரவர் அருளை பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார் ‌

Categories

Tech |