Categories
உலக செய்திகள்

சூப்பர்….! உலக சுகாதார நிறுவனத்தில்…. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பதவி….!!

டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 45 ஆகும். இவரை  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார்.

இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இவர் டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர் மற்றும் எழுத்தாளர் என பல முகங்களை  கொண்டுள்ளார். இவரது மனைவி ஆலிஸ் சென் ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் டாக்டர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |