Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. ஆதார் கார்டு வேணுமா?…. இனி மொபைல் நம்பரை வேண்டாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இந்தியர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு தனிநபர் அடையாளமாக உள்ளது. ஆதார் கார்டு நிறைய சலுகைகள் உள்ளன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை பான் கார்டு, ரேஷன் கார்டு, சிம் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில்தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கூட ஆதார் கார்டை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆவணம் மொபைல் நம்பரை பதிவு செய்யாதவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் UIDAI  இணையப் பக்கத்திற்குச் சென்று ‘My Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

‘ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு’ என்பதைக் கிளிக் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.

நீங்கள் ஆதார் எண்ணுக்குப் பதிலாக 16 இலக்க மெய்நிகர் அடையாள எண்ணையும் (VID) உள்ளிடலாம்.

உங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கார்டை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், ‘எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

உங்கள் மாற்று எண் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணை உள்ளிடவும்.

‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்

நீங்கள் உள்ளிட்ட மாற்று எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.

இறுதியாக  ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’ என்ற வசதியை கிளிக் செய்து, இறுதியாக ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, ‘பணம் செலுத்து’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |