Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. இனி திருமண நிகழ்வுகளில் 500 பேருக்கு அனுமதி….. தமிழக அரசு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று சற்று சீரடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 3 (நாளை) முதல் வரும் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள 500 பேருக்கு அனுமதி. இதையடுத்து இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 250 பேருக்கு அனுமதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |