கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
முகக்கவசம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் உலகில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முகக்கவசம் அணிவதற்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் கொரோனா பரவல் சங்கிலியை முகக்கவசம் மூலம் உடைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தலைநகர் டெல்லியில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் தலைமையிலான டெல்லி பேரழிவு மேலாண்மை ஆணையம் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய தேவை இல்லை.
தனியாக பயணம் செய்யும் ஓட்டுநர்களும் முகக்கவசம் அணிய தேவை இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. வாடகை கார்கள் மற்றும் இதர வாடகை வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக முகக்கவசம் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.2000 இருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.