Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்….. இனி 24 மணி நேரமும்…. புதுச்சேரி அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் வரி செலுத்துவோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி இணை ஆணையர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் வரும் ஜிஎஸ்டி மத்திய கலால் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தின் தலைமை ஆணையர் வரி செலுத்துவோர் குரல் மூலம் சேவா கேந்திரா, வர்த்தக வசதி மையத்தை தொடர்பு கொள்வதற்காக வரி செலுத்துவோர் சேவை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் 9445848686 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம். இது சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி யில் தலைமை ஆணையர் இடமிருந்து அந்தந்த பகுதி ஆணையர்களுக்கு விரைவில் அனுப்பப்படும். மேலும் புதுவை எல்லைக்குட்பட்ட அனைத்து வரி செலுத்துவோர் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |