Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…. இலவச சிலிண்டர் திட்டத்தில்…. இத்தனை கோடி பேர் பயன்…!!!

கேஸ் சிலிண்டர் இணைப்பு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லாமல்  கொடுப்பதற்க்கு  உஜ்வாலா 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் இணைப்பு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லாமல்  கொடுப்பதற்காக உஜ்வாலா 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்ட பகுதியில் பயன்பெறாதவர்களுக்காக 2016-ஆம் ஆண்டில் உஜ்வாலா 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்  தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகள் பயனடைந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் கேஸ் சிலிண்டர் அடுப்பு வசதி இல்லாத ஏழை எளிய கிராமப்புற குடும்பங்களுக்கு புதிய சிலிண்டர் இணைப்பு வழங்குவதே உஜ்வாலா 2.0 திட்டத்தின் நோக்கம் ஆகும்.  இதனை தொடர்ந்து அடுப்பு முதல் கேஸ் சிலிண்டர்  இலவசம் மற்றும் இணைப்புக்கு டெபாசிட் கிடையாது. இதனை அடுத்து புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயரும்  ஏழைக் குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்பு
அடையாள சான்றாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த இத்திட்டத்தை பெற   pmuy.gov.in இணையதளம் வாயிலாக ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |