நம்முடைய அவசர தேவைக்காக உடனடியாக பணம் தேவைப்படும் பொழுது பெரும்பாலும் நகைகளை கொண்டு போய் கடன் வாங்குவது தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். ஏனெனில் நகை கடன் வாங்க நம்மிடம் நகை இருந்தால் மட்டுமே போதும். அதை தவிர வேற எதுவும் தேவை இல்லை. மேலும் நகை கடனுக்கு வழக்கமாக குறைந்த வட்டி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி நகைகடனுக்கு வேகமாக பிராசஸிங் முடிக்கப்பட்டு விரைவில் பணம் கைக்கு வந்துவிடும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கடனுக்கான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
எஸ்பிஐ வங்கி நகை கடன் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்குகிறது. மேலும் எஸ்பிஐ யோனா ஆப் மூலமாக மிக எளிதாக நகை கடனுக்கு விண்ணப்பித்து விடலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ப்ளக்சிபில் ஆப்ஷன்கள் உள்ளன .கடன் தொகையில் 0.25% பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சமாக 200 ரூபாய் ஜிஎஸ்டியுடன் பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும்.