அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பணி நிரந்தரம் கோரி போராடிய 16,000 செவிலியர்களில் 5 ஆயிரம் பேர் அடுத்த ஆறு மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் வாக்குறுதியளித்தார். இதனையடுத்து செவிலியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.