பட்டியலின மக்கள் மீது நாடு முழுவதும் சில காலங்களாகவே தொடர்ந்து அடக்குமுறைகள் நடந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சிறுவன் ஒருவன் தண்ணீரை குடித்ததால் ஆசிரியர் ஒருவர் கொடூர தாக்குதல் நடத்தினார். அதேபோல உத்திர பிரதேச மாநிலத்தில் கழிவறைக்கு சென்ற பட்டியல் இன மாணவனை பள்ளி ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இப்படி தொடர்ந்து பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்நது வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தின் இந்து கடவுளின் சிலையை தொட்டதற்காக சிறுவனின் குடும்பத்திற்கு 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அம்மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட சிறுவனை குடும்பத்தோடு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளார். மேலும், இதுபோன்ற தீண்ட டாமையை அனுமதிக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.