Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூப்பர் சிங்கரிலிருந்து விலகுகிறேன்’… நடுவர் பென்னி தயாள் எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன?…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து அந்த நிகழ்ச்சியின் நடுவர் பென்னி தயாள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 8-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார். சிறப்பாக பாடி வந்த இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

பென்னி வெளியிட்ட பதிவு

மேலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான் இதற்கு காரணம் எனக்கூறி அவர்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நடுவர் பென்னி தயாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இனி சூப்பர் சிங்கர் தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் நான் வெளியிட மாட்டேன். நானும் ஒரு மனிதன் தான். சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி மோசமாக பதிவிடுவது சரியா?. நான் அடுத்த சீசனில் நடுவராக கலந்துகொள்ள மாட்டேன்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |