சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் ஷகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, மதுரை முத்து உள்ளிட்ட பலர் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக வந்து கலக்கினர்.
சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சரத், புகழ், பாலா, சிவாங்கி, தங்கதுரை, ரக்ஷன் ஆகியோர் உள்ளனர்.