சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை பல சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சாம் விஷால். இவர் இந்த நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தை பிடித்தார். இதைத்தொடர்ந்து சாம் விஷாலுக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
https://www.instagram.com/p/CWfOwmKIU5o/?utm_source=ig_embed&ig_rid=6ce4ef0d-614d-46dc-9d7a-f8dfefd9994f
மேலும் தெலுங்கில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற சிட்டி ஸ்டோரி பாடலை சாம் விஷால் தான் பாடியிருந்தார். இந்த பாடல் தமிழில் தளபதி விஜய் குரலில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாம் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.