தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டிற்கான சிறந்த அரசு பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அமைந்துள்ள 39 மாவட்டங்களில் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.