சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் முதலில் நடிகை நதியா தான் ஒப்பந்தமாகியிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரண்ய கண்டம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவருடைய அடுத்த படைப்பாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்று நடித்திருந்தார். இதற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நான்கு கதாபாத்திரங்கள் இறுதியில் ஒன்றிணைவது படத்தின் கதை கரு. இந்தப்படத்தில் பகத் பாஸில், சமந்தா மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் முதன்முதலாக ரம்யா கிருஷ்ணனின் கேரக்டருக்கு பதிலாக நடிகை நதியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் படப்பிடிப்பின்போது தொடர்ந்து கொடுக்கப்பட்ட டார்ச்சர் காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த படத்திற்கு ரம்யாகிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.