மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தி வணிகர்களுடன் உரையாடுகின்றனர்.
சீனாவில் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் செயற்கை நுண்ணறிவு செயலி உதவியுடன் சீனவிலுள்ள வணிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை ஸ்மார்ட்போன் குரல் மூலம் பதிவு செய்கின்றனர். அதை பிரத்தியேக செயலி மூலம் மாண்டரின் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்து வணிகர்களுக்கு குரல் வடிவில் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து வணிகர்கள் பேசும் மாண்டரின் மொழி மற்ற மொழிகளுக்கு மாற்றப்படுகிறது. இதற்காகவே சீனாவிலேயே உருவாக்கப்பட் ஐ-பிளைடெக் ஜார்விசென் என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் செயலி பயன்படுத்தப்பட்டுவருகிறது.