தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்டிஇஎம் என்ற திட்டத்தின் கீழ் 6 நாட்கள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை ஐஐடி சார்பாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பெருமைக்குரியது.
மாணவர்களுக்கு எட்டாக்கனியாக எதுவும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆறு நாட்கள் பயிற்சியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை ஐஐடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டுவருவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளார்.