ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்- வினி ராமன் தம்பதியினரின் கல்யாண பத்திரிகை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடியதால், அந்த அணி இந்தாண்டு மெகா ஏலத்ததிற்காக க்ளென் மேக்ஸ்வெல்ளை தக்கவைத்துக் கொண்டது. அவரின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 218 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேக்ஸ்வெல் – வினி ராமன் இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.