பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக1 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் பங்கேற்க 2042 பேருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலரும் பங்கேற்கவில்லை. இதனால் அன்றைய தேதியில் பங்கேற்காத மாணவர்கள் ஆகஸ்ட் 12 நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.