“பிரபஞ்ச அழகி” போட்டியில் இனி திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் மற்றும் தாய்மார்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
“பிரபஞ்ச அழகி” போட்டியில் இனி திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் மற்றும் தாய்மார்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த “பிரபஞ்ச அழகி” போட்டியில் கலந்து கொள்ள 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் திருமணம் செய்திருக்கக்கூடாது, குழந்தை பெற்றிருக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்து வந்தன.
இந்நிலையில் இனி “பிரபஞ்ச அழகி” போட்டியில் திருமணமானவர்களும் அம்மாக்களும் கலந்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவு அவரது வெற்றிக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருதி, இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இப்படி “பிரபஞ்ச அழகி” போட்டியில் புதுவித புரட்சியை ஏற்படுத்தும் விதமாக செய்யப்பட்டிருக்கும் இந்த விதி மாற்றத்தை பலரும் வரவேற்று வருகின்றனர்.