சூப்பர் மார்க்கெட்டில் திருடியதோடு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டத்தை அடுத்து இருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருடர் ஒருவர் 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் 5,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றார். அதுமட்டுமன்றி திருடியதற்கு மன்னிப்பு கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார்.
அதில் “மன்னித்து விடுங்கள். நான் மிகுந்த பசியில் இருக்கிறேன். நீங்கள் ஒருநாள் வருமானத்தை தான் இழந்தீர்கள். ஆனால் நான் எடுத்துச் சென்றது எனது குடும்பத்திற்கு மூன்று மாத வருமானத்தில் சமம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என திருடன் எழுதியுள்ளான். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து சென்றதும் தெரியவந்துள்ளது.