Categories
மாநில செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் மோசடி…. டூத் பிரஷ் மூலம் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் சென்ற 40 வருடங்களாக சுரேஷ் என்பவர் மாயாராம் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன் கடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ராஜேஷ் என்பவர் பணியாற்றி வந்ததாகவும் தங்களுக்கு தெரியாமல் போலி பில் வாயிலாக ரூபாய் 45 லட்சம் வரை சிறுகசிறுக மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதிலும் குறிப்பாக ஒரு வாடிக்கையாளர் டூத்பிரஷை மாற்ற பல்பொருள் அங்காடிக்கு நேரில் வந்துள்ளார்.

இந்நிலையில் பில்லை வாங்கி சோதனை மேற்கொண்டபோது வாடிக்கையாளருக்கு கொடுத்த பில்லில் ரூபாய் 5,000 என்றும் பல்பொருள் அங்காடியில் உள்ள கணினியில் ரூபாய் 2,500 என்றும் குறிப்பிட்டு இருந்ததை பார்த்து சுரேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்தபோது தன் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்துவந்த ராஜேஷ் 2 பில்களை உருவாக்கி, தவறாக கணக்கு காட்டி மோசடி செய்து வந்தது சுரேஷுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டபோது ரூபாய் 5 லட்சம் பணத்தை மட்டுமே தான்  மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் ராஜேஷ் பணிபுரிந்த 8 வருடங்களுக்கான வரவு செலவு கணக்கை பார்த்தபோது சிறுகச்சிறுக ரூபாய் 45 லட்ச ரூபாய் பணத்தை ராஜேஷ் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து தான் மோசடி செய்த மொத்த பணத்தையும் தருவதாக ராஜேஷ் பேப்பரில் எழுதிகொடுத்துள்ளார். அதன்பின் வீட்டுக்கு சென்ற ராஜேஷ் பிறகு தலைமறைவானார். இதன் பிறகு பல்பொருள் அங்காடி உரிமையாளரான சுரேஷ் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கோயமுத்தூரில் தலைமறைவாகயிருந்த ராஜேஷை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தன் தந்தை பணிபுரிந்த கடையில் சாதாரண ஊழியராக சேர்ந்த ராஜேஷ், நன்கு வேலை பார்த்து உரிமையாளர் சுரேஷுக்கு நம்பிக்கை ஏற்படும் அடிப்படையில் நடந்துக் கொண்டுள்ளார்.

இதனால் அனைத்து கணக்கு பொறுப்புகளையும் தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அதனை பயன்படுத்திக்கொண்டு சிறுகசிறுக போலி பில் தயாரித்து கொள்ளையடித்ததாகவும்” ராஜேஷ் வாக்குமூலம்  அளித்துள்ளார். அதுமட்டுமின்றி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து சொந்தஊரில் வீடு மற்றும் கார் என சொகுசாக வாழ்ந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை மறைத்து ஏழைப்போல் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம், ராஜேஷ் தொடர்ந்து நடித்து பல்வேறு லட்ச ரூபாய் கொள்ளை அடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின் எவ்வளவு ரூபாய் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து கொள்ளை அடித்துள்ளார் என்பது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |