Categories
உலக செய்திகள்

சூப்பர் லீக் போட்டிகள்… மறுப்பு தெரிவித்த முன்னணி அணிகள்… இளவரசர் வில்லியமின் ட்விட்டர் பதிவு…!!!

ஐரோப்பிய சூப்பர் லீக் போட்டிக்கு இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவரான இளவரசர் வில்லியம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பாவின் புதிய கால்பந்து ‘சூப்பர் லீக்’ போட்டிகள் தொடங்குவதற்கான பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் 12 முன்னணி கால்பந்து கிளப்புகளான ஏசி மிலன், அர்செனல், அட்லெடிகோ மாட்ரிட், செல்சியா, பார்சிலோனா, இன்டர் மிலன், ஜுவென்டஸ், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆகியவை இணைந்து சூப்பர் லீக் என்ற பெயரில் கால்பந்து போட்டியை நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த அறிவிப்புக்கு UEFA மற்றும் FIFA தலைவர்களிடமிருந்தும், ஐரோப்பிய நாடுகளின் தேசிய கால்பந்து சங்கங்களிடமிருந்தும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து இந்த போட்டியில் பங்கேற்க ஜெர்மன் பேயர்ன் முனிச், பிரெஞ்சு பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், போர்த்துகீசிய போர்டோ மற்றும் போருசியா டார்ட்மண்ட் ஆகிய முன்னணி அணிகள் மறுத்துவிட்ட நிலையில் இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவரான இளவரசர் வில்லியம் இந்த போட்டிற்குஎதிரான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் கால்பந்து சமூகத்தையும், போட்டியின் நன்மதிப்பு களையும் பாதுகாப்பது நம்முடைய கடமை என்றும் சூப்பர் லீக் போட்டி நம் விளையாட்டிற்கு ஏற்படுத்தும் பாதிப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் இது கால்பந்து ரசிகர்களிடையே  கவலையை ஏற்படுத்தும் என்றும் இளவரசர் வில்லியம் கூறியுள்ளார். அந்த வரிசையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஆகியோரும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |