நடிகை நஸ்ரியா ஒரு போட்டோவை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்துள்ளார்.
ராஜா ராணி படத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இந்த படத்தில் இவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.. இந்த படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட நஸ்ரியா, பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.. திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து சற்று ஒதுங்கி கொண்ட நஸ்ரியா தன்னுடைய கணவரின் ‘டிரான்ஸ்’ என்ற படத்தின் மூலம் திரும்பவும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்..
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா அவ்வப்போது இன்ஸ்டாவில் தன்னுடைய கணவருடன் இருக்கும் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில், தற்போது ஒரு போட்டோவை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்துள்ளார்.. அதில், நஸ்ரியா புன்னகையுடன் பார்க்கும் பார்வை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக இருக்கிறது..
https://www.instagram.com/p/CUJwrORvw-b/?utm_source=ig_web_copy_link