நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். முதலில் குண சித்திர கதாபாத்திரங்களில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக முன்னேறினார். பின்னர் பல படங்களில் நடித்து வெற்றி வாய்ப்பை குவித்தார் .இந்த நிலையில் ரஜினியின் சமீபத்திய படங்கள் எதிர்பாராத வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனால் தற்போது ரஜினி நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தை நல்ல வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றனர்.
இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். நெல்சன் இயக்குகிறார். ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி 170 வது திரைப்படத்தை, சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக இவரை தேர்ந்ததற்கான காரணம் என்னவென்றால் ரஜினி இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்ல. மேலும் இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு சற்று நஷ்டம் ஏற்பட்டதாம். எனவே தர்பார் படத்தின் தோல்வியை சரிகட்டுவதற்காக ரஜினி லைக்கா நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
எனவே சிபி சக்ரவர்த்தி இயக்கிய டான் திரைப்படம் லைக்காவிற்கு பல கோடி லாபம் கொடுத்ததால் ரஜினியுடன் சிபி சக்கரவர்த்தி சிபாரிசு செய்துள்ளது லைக்கா நிறுவனம். ரஜினி இதற்கு ஓகே சொன்னதால் தலைவர் 170 படத்தின் இயக்குனராக சிபி சக்கரவர்த்தி ஆனார். ஆனால் இந்த தகவலை எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு தெரியவரும்.