ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி ஜலேன்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தி ஜெலண்ட். இந்த படத்தில் நடிகர் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையும் மாடலுமான ஊர்வசி ரவுட்டேலா நடித்திருந்தார். மேலும் விஜயகுமார், பிரபு, யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். மேலும் இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே சரவணன் அருள் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள சரவணன் அருள் தனது படம் சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து மறைந்த நடிகர் விவேக் தனது படத்தில் நடித்த போது எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ஷேர் செய்திருக்கின்றார். மேலும் சூப்பர் ஸ்டார் உடனான தருணங்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றார் இந்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.