தமிழ் திரையுலக பிரபல வில்லன் நடிகர் டுவிட்டரில் ‘எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன் தான் ‘ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். பின்னர் ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். ஆனந்தராஜ் கொடூர வில்லனாக நடித்திருந்த இந்த திரைப்படம் தான் அவருக்கு சிறந்த வில்லன் நடிகர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
https://twitter.com/ActorAnandaraj/status/1328560182876487681
இந்நிலையில் இன்று ஆனந்தராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,நான் நிறைய படம் செய்தேன் . ஆனால் நான் உங்களுடன் பணிபுரிந்த அந்த திரைப்படம் எனக்கு சிறந்த வில்லன் என்று பெயரிடப்பட்டது. எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன் மட்டுமே என்று பதிவிட்டு ரஜினிக்கு டேக் செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு ரஜினியின் ரசிகர்கள் லைக்ஸ் போட்டு வருகின்றனர்.