பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் ஷாருக்கான் அவர்களது படத்தில் நடிப்பதற்கு பெப்சி உமாவிடம் கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்
90ஸ் ஹிட்ஸ்களால் மறக்கமுடியாத டிவி ஷோ பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பெப்சி உங்கள் சாய்ஸ். அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே பலர் பார்த்தனர். ஏராளமான சீரியல் வாய்ப்புகளும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை மட்டுமே நடத்தி வந்தார் பெப்சி உமா. அஜீத்குமாரிடம் தீணா திரைப்படத்தில் பெப்சி உமா பேசுவது போன்று லைலா கிண்டலடித்து இருப்பார். அந்த அளவிற்கு பெப்சி உமாவின் நிகழ்ச்சி பிரசித்திபெற்றது. சினிமா கதாநாயகிகளை மிஞ்சும் அழகும், அவரது வண்ணவண்ண புடவைகளும் நிகழ்ச்சியை பார்க்கும் பெண்களையும் கவர்ந்து வந்தது.
இப்போதைய காலகட்டத்திலும் பெப்சி உமாவை நடிக்க வைப்பதற்கு ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் இதுவரை யாரிடமும் சிக்கவில்லை. பிரபல கம்பெனி ஒன்றில் இப்போது நிர்வாக இயக்குனராக இருந்து வருகின்றார் பெப்சி உமா. இந்நிலையில் வெகுகாலத்திற்குப் பிறகு பெப்சி உமா பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஒரு பேட்டியில் மனம் திறந்த பெப்சி உமா, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவரது படத்தில் நடிப்பதற்கு கேட்டார்.. ஆனால் நான் சம்மதிக்கவில்லை. அதேபோன்று பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அவரது படத்தில் நடிப்பதற்கு அரை மணி நேரமாக என்னுடன் பேசினார் ஆனாலும் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.